‘ஆபத்தை’ உணராமல் காதுகளில் ‘ஹெட்போன்’... ஒரு நொடி ‘கவனக்குறைவால்’ இளம்பெண்ணுக்கு நேர்ந்த ‘துயரம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jan 10, 2020 12:34 AM

காதுகளில் ஹெட்போன் மாட்டியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற இளம்பெண் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Kalyan Accident Girl Using Earphones Run Over By Train

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அந்துதேவி துபே (28). பி.எட் படித்துவந்த இவர் நேற்று வழக்கம்போல கல்லூரிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். கல்யாண் ரயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சங்கேல்வடி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த புறநகர் ரயில் மோதி அந்து தேவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தின் போது அந்துதேவி தனது காதுகளில் ஹெட்போன் மாட்டியபடி கவனக்குறைவுடன் தண்டவாளத்தில் நடந்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : #ACCIDENT #TRAIN #GIRL #EARPHONES