‘சிறுத்தையிடம் இருந்து தம்பியைப் போராடிக் காப்பாற்றிய’.. ‘வீரச் சிறுமிக்கு நடந்த பரிதாபம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 10, 2019 12:49 PM
சிறுத்தையிடம் இருந்து 4 வயது தம்பியை போராடிக் காப்பாற்றிய சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரகாண்ட் உள்ளபவுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராக்கி (11) என்ற சிறுமி அவருடைய 4 வயது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சிறுவனை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளது. அதைப் பார்த்த சிறுமி தைரியமாக சிறுத்தையுடன் போராடி தம்பியைக் காப்பாற்றியுள்ளார்.
இதில் சிறுவன் பெரிய காயங்கள் எதுவும் இல்லாமல் உயிர் தப்பியுள்ள நிலையில் ராக்கிக்கு தலையிலும், கழுத்திலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது கிராம மக்கள் வர சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியுள்ளது. பின்னர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Tags : #UTTARAKHAND #BROTHER #SISTER #LEOPARD #SAVED #INJURED
