இதுல ஒரு 'விலங்கு' இருக்கு கண்டுபுடிங்க..வைரல் போட்டோ..'திணறும்' நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 30, 2019 10:07 PM

சில நேரங்களில் நாம் சாதாரணமாக பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரல் ஆகும்.அப்படி ஒரு புகைப்படம் தான் தற்போதைய நெட்டிசன்களின் ஹாட் டாபிக்.

 

Can You Find the Leopard in This Picture,Goes Viral

2 நாட்களுக்கு முன்பு பெல்லே லாக் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து இதில் என்ன விலங்கு மறைந்து உள்ளது? என கண்டுபிடியுங்கள். ஆனால் கீழே பதில்களை சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

 

சுமார் 3000-க்கும் அதிகமான பேர் இதனைப் பகிர தற்போது பலரும் இந்த புகைப்படம் குறித்துத்தான் பேசி வருகின்றனர்.முதலில் பார்க்கும்போது எதுவும் தெரியாது.ஆனால் கூர்ந்து கவனித்தால் அதில் சிறுத்தை ஒன்று இருப்பது தெரியவரும்.இதனை பலரும் கண்டுபிடித்து பதில்களை சரியாக சொல்லி வருகின்றனர்.

Tags : #TWITTER #LEOPARD