‘திடீரென வெடித்த டயரால்’.. ‘ஜீப் மீது வேன்’.. ‘நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Sep 27, 2019 05:40 PM
ராஜஸ்தானில் ஜீப் மீது வேன் மோதிய கோர விபத்தில் 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள நெடுஞ்சாலையில் இன்று பயணிகள் வேன் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வேனின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் மறுபுறம் வந்துகொண்டிருந்த ஜீப் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags : #RAJASTHAN #JEEP #VAN #MINIBUS #BOLERO #ACCIDENT #TYRE #DEAD #INJURED