கல்லூரி பேருந்து மோதி 5 பள்ளி மாணவிகள் படுகாயம்..! ஆத்திரத்தில் பேருந்தை அடித்து நொறுக்கிய மக்கள்..! பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 04, 2019 05:10 PM

பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் பள்ளி மாணவிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

College bus accident in Perambalur 5 students injured

பெரம்பலூர் மாவட்டம் சித்தளி கிராமத்தைச் சேர்ந்த 10 பள்ளி மாணவிகள் குன்னம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது குன்னத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த மாணவிகள் மீது மோதியுள்ளது. இதில் 5 மாணவிகள் படுகாயமடைந்தனர்.

அப்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாணவிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த விபத்தில் அகல்யா, காயத்ரி, சரண்யா, செந்தாமரை, கோமதி என்ற 5 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் காய்திரி என்ற 9 -ம் வகுப்பு மாணவி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தனியார் கல்லூரி பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என பேருந்தை மக்கள் அடித்து நொறுக்கினர். அப்போது அந்த வழியே வந்த சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சொந்தமான 10 -க்கும் அதிகமான பேருந்துகளையும் மக்கள் தாக்கினர். மேலும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : #PERAMBALUR #BUSACCIDENT #STUDENTS #INJURED #COLLEGEBUS