‘300 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து’.. ‘பயங்கர விபத்தில் 23 பேர் பலியான பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 03, 2019 11:33 AM

பெரு நாட்டில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

23 killed 20 injured as bus plunges off cliff in Peru

பெரு நாட்டின் குவிஸ்பிகாஞ்சி மாகாணத்திலுள்ள புவேர்ட்டோ மால்டோனாடோவிலிருந்து கஸ்கோ நகருக்கு பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. கஸ்கோவிலுள்ள மலைப்பாங்கான சாலையில் பேருந்து 40க்கும் அதிகமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து பேருந்து சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்திற்குள் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #PERU #BUS #ACCIDENT #MOUNTAIN #CLIFF #DEAD #INJURED