‘படுக்கையில் அரைகுறை ஆடையுடன்’.. ‘இறந்து கிடந்த மனைவி, மகன்’..‘உறைந்து நின்ற கணவர்’.. ‘அதிரவைக்கும் சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 12, 2019 06:04 PM

நவி மும்பையில் திருமணமான இளம்பெண்ணும் அவரது மகனும் கொடூரமாகக் கொலை செய்யப்படுள்ளனர்.

Navi Mumbai Man kills brothers wife 2 year old son

நவி மும்பையைச் சேர்ந்த யோகேஷ் சவான் என்பவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், 2 வயதில் அவினாஷ் என்ற ஒரு மகனும் இருந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய யோகேஷ் நீண்ட நேரமாக தட்டியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்த யோகேஷ் அவர்கள் உதவியுடன் வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது படுக்கையறையில் இருந்த கட்டிலில் ஜெயஸ்ரீயும், அவினாஷும் அரைகுறை ஆடையுடன் இறந்து கிடந்துள்ளனர். இதைப் பார்த்து உறைந்து போய் நின்ற யோகேஷுக்கு அங்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அதே அறையின் ஒரு ஓரத்தில் யோகேஷின் அண்ணன் சுரேஷ் அமைதியாக உட்கார்ந்திருந்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. 31 வயதான சுரேஷ் பல மாதங்களாக வேலை இல்லாமல் இருந்ததால் தனது பெற்றோரையும், சகோதரரையும் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் யோகேஷும், ஜெயஸ்ரீயும் அவரைக் கடுமையாகத் திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று தனக்கு வேலை கிடைத்த உற்சாகத்தில் சுரேஷ் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஜெயஸ்ரீ மட்டுமே சிறுவன் அவினாஷுடன் வீட்டில் இருந்துள்ளார். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட சுரேஷ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ் அவினாஷ் மற்றும் ஜெயஸ்ரீயை தலையணையை வைத்து அமுக்கிக் கொலை செய்துள்ளார். சுரேஷ் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டபோதும் ஜெயஸ்ரீ அரைகுறை ஆடையுடன் இறந்துகிடந்தது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை போலீஸாருக்கு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #NAVIMUMBAI #BROTHER #WIFE #SON #BRUTAL #MURDER #SHOCKING