டயர் பஞ்சராகி ஓரமாக நின்ற லாரி மீது மோதிய பேருந்து..! 5 பேர் பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 12, 2019 04:08 PM

சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

6 dead after bus rams into truck on Pune-Bangalore Highway

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் வந்துள்ளது. புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் டயர் பஞ்சரான லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து லாரியின் பின்புறம் பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Tags : #ACCIDENT #BUSACCIDENT #HIGHWAY #PUNE #DEAD #INJURED #TRUCK #BANGALORE