ஆத்துல குளிக்கப்போன அக்கா, தம்பி மூழ்கி பலியான பரிதாபம்..! துடிதுடித்துப்போன தாய்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 25, 2019 10:47 AM

குளிக்க சென்ற அக்கா, தம்பி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

River drowns 2 children died in Tiruvarur district

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கண்டரமிணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வம்-கவிதா தம்பதி. இவர்களுக்கு திவ்யா (11),ஸ்ரீராம் (8) என்ற இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். செல்வம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அக்கா திவ்யா மற்றும் தம்பி ஸ்ரீராம் ஆகிய இருவரும் அருகில் உள்ள திருமலைராஜன் என்ற ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் ஆற்றில் மூழ்கியுள்ளனர்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் போராடி மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே குழந்தைகள் இறந்த தகவல் அறிந்த தாய் கவிதா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் கவிதாவை மீட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஆற்றில் குளிக்க சென்ற அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #RIVER #SISTER #BROTHER #DEATH #THIRUVARUR #DROWNS