‘மொஹரம் பண்டிகைக்கு நடந்த தீமிதி திருவிழா’.. வேடிக்கை பார்த்தவர்களுக்கு நடந்த பயங்கரம்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 10, 2019 05:58 PM

மொஹரம் பண்டிகை தினத்தையொட்டி நடந்த தீமிதி திருவிழாவின் போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Roof collapses during Muharram celebrations in AP

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள பீர்லா என்ற கிராமத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டி நேற்றிரவு தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. இதனைக் காண ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். அப்போது பலர் தீமிதி திருவிழா நடைபெற்ற இடத்துக்கு அருகே இருந்த சுவற்றில் இருந்தபடி பார்த்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து கீழே இருந்தவர்கள் மீது விழுந்துள்ளது.

இந்த விபத்தில் 20 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உடனடியாக காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரின் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீமிதி திருவிழாவின் போது கட்டிடத்தின் சுவர் இடிந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MUHARRAM #INJURED #TERRACE #COLLAPSED #ANDHRAPRADESH