‘தனியார் பேருந்து மீது’.. ‘108 ஆம்புலன்ஸ் மோதிய பயங்கர விபத்தில்’.. ‘நோயாளி, ஓட்டுநருக்கு நடந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 04, 2019 12:35 PM

செங்கல்பட்டில் 108 ஆம்புலன்ஸ் தனியார் பேருந்துமீது மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

2 dead in ambulance private bus accident in Kanchipuram

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி கன்னியம்மாள் என்பவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் முன்னால் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயக்குமார், கன்னியம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் பலத்த காயமடைந்த ஆம்புலன்ஸில் இருந்த உதவியாளர் தினகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒழுங்காக கவனிக்காததே விபத்திற்குக் காரணம் என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : #KANCHIPURAM #108 #AMBULANCE #PRIVATEBUS #ACCIDENT #DEAD #INJURED #DRIVER #PATIENT