'எங்க வந்து இந்த வேல பாக்குற?'.. நள்ளிரவில் இளைஞரை கட்டிவைத்து உதைத்த மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 10, 2019 12:44 PM

சூலூர் அருகே வீட்டிற்குள் திருட முயற்சி செய்த மர்ம நபரை, ஊர் மக்கள் சேர்ந்து பிடித்ததோடு, மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

thief caught to people and beaten by them in Coimbatore

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே உள்ள காங்கேயன் பாளையம் பகுதியில் தனது வீட்டின் ஜன்னல் கதவு திறந்திருப்பதை அந்த வீட்டு உரிமையாளர் மாணிக்கம் பார்த்துள்ளார். யாரோ முன் பின் தெரியாத மர்ம நபர்தான் வீட்டுக்குத் திருட வந்திருக்க வேண்டும் என்பதை மாணிக்கம் யூகித்துள்ளார்.

உடனே கமுக்கமாக அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். ஆனால் அதற்குள், திருட வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த கவியரசு என்கிற அந்த இளைஞர் தப்பியோடியுள்ளார். ஆனாலும் ஓடிச் சென்று தப்பியோடிய திருடனைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் சூலூர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த போலீஸார், திருட வந்த கவியரசுவை விசாரணைக் கைதியாக அழைத்துச் சென்றனர்.

Tags : #THIEF