‘பின்னோக்கி இறங்கியபோது’.. ‘லிஃப்ட் கதவில் சிக்கிய குழந்தை போராடி மீட்பு’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Sep 26, 2019 06:13 PM

சீனாவில் லிஃப்ட் கதவில் சிக்கிக் கொண்ட குழந்தை மீட்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

China Video Baby Trapped Between Elevator and Hallway Rescued

சீனாவின் ஹெஃபெய் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் லிஃப்ட்டில் சென்றுள்ளார். இறங்க வேண்டிய தளம் வந்ததும் அவர் குழந்தையை வைத்திருந்த ஸ்கூட்டருடன் பின்னோக்கி இறங்கியுள்ளார். அப்போது லிஃப்டின் கதவு திடீரென மூட குழந்தை லிஃப்டின் கதவில் சிக்கிக் கொண்டுள்ளது.

உடனடியாக லிஃப்ட் நிறுத்தப்பட்டு இதுகுறித்து மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் லிஃப்டின் கதவில் சிக்கிக் கொண்ட குழந்தையை போராடி பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHINA #BABY #ELEVATOR #LIFT #DOOR #STUCK #CCTV #VIDEO #SAVED