'வீட்டுச் சுவரை தாவி உள்ளே புகுந்த சிறுத்தை' 'கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்'.. பீதியை கிளப்பிய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 16, 2019 11:55 PM

இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து நாயை கவ்விக்கொண்டு செல்லும் சிறுத்தையின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

WATCH: Leopard enters Karnataka home runs away with pet dog

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள திர்தாஹலி பகுதியில் வீட்டின் சுற்றுப்புற சுவரை சிறுத்தை ஒன்று தாவிக் குதித்து உள்ளே செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் வீட்டின் மதில் சுவரை மெதுவாக தாண்டி பதுங்கியபடி வீட்டுக்குள் நுழைகிறது. சிறிது நேரத்தில் வீட்டுக்காவலுக்கு நின்ற நாயை வாயில் கவ்வியபடி செல்கிறது. இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

முன்னதாக குஜராத் மாநிலத்தில் குடியிருப்பு பகுதிகளில் சிங்கள்கள் சர்வசாதாரணமாக சுற்றித்திரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் கர்நாடாகாவில் வீட்டுக்குள் புகுந்து நாயைக் கவ்விக்கொண்டு சென்ற சிறுத்தையின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #LEOPARD #KARNATAKA #HOUSE #DOG #THIRTHAHALLI #SHIVAMOGGA