‘இசை, நடன நிகழ்ச்சியில்’... பாடிக்கொண்டிருந்த பாடகிக்கு’... ‘ரசிகர்கள் முன்னிலையில் நடந்த சோகம்’... அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Sep 02, 2019 06:38 PM

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகி ஒருவர், தவறாக வெடித்த வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Spanish pop star dies after freak on stage fireworks accident

ஸ்பெயின் நாட்டில், சூப்பர் ஹாலிவுட் குழுவினரின் இசை நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இதனை கண்டுகளித்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 2 மணியளவில் மேடையில் பாடிக் கொண்டிருந்த 30 வயதான பாப் பாடகி ஜோனா செய்ன்ஸ்-ன் வயிற்றில், மேடையில் இருந்த வெடிகள் வெடித்து சிதறின.

இதில் பலத்த காயமடைந்த ஜோனசுக்கு சக கலைஞர்கள் உதவினர். விபத்து நடந்தவுடன் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு மேடை திரையிடப்பட்டது. கூட்டத்தில் பார்வையாளராக இருந்த மருத்துவர் ஒருவர், ஜோனசுக்கு உதவினார். 20 நிமிடங்களுக்குப் பின் ஆம்புலன்ஸ் வந்து அவிலா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வீடியோ வெளிவந்து தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இரன்டு ராக்கெட் வெடித்து ஒன்று வலப்புறம் சென்றுவிட்டது, மற்றொன்று தான் பாடகியின் வயிற்றை தாக்கியுள்ளது என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

Tags : #DIED #SPAIN #HOLLYWOOD