‘ரயிலில் நடந்த அரிதிலும் அரிதான சம்பவம்’.. பறிபோன பெண் பயணியின் உயிர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 30, 2019 03:58 PM

ரயிலின் மேல் படுக்கையில் இருந்து கீழே விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman dies after falling from upper berth of train in Bengaluru

சரஸ்வதி என்ற 40 வயது பெண் மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற உதயன் எக்ஸ்பிரஸில் பயணம் செய்துள்ளார். ஏசி கோச்சில் பயணம் செய்த அவர் பெங்களூருவை ரயில் நெருங்கியதும் மேல் படுக்கையில் இருந்து கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால்தவறி கீழே விழுந்துள்ளார். இதில் சரஸ்வதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அருகில் இருந்த சகபயணி ஒருவர் உடனே இதுகுறித்து ரயில்வேதுறை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தகவலறிந்து மருத்துக்குழு ரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்துள்ளது. ரயில் வந்ததும் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சரஸ்வதி சுயநினைவை இழந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த மருத்துவர் ஸ்நேகலதா, ‘ரயில் வருவதற்கு முன்னதாகவே நாங்கள் ரயில் நிலையத்தில் தயாராக இருந்தோம். ரயில் வந்ததும் உடனே அவருக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது நாங்கள் கேட்ட கேள்விக்கு சரஸ்வதி தெளிவாக பதில் அளித்தார். ஆனால் சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தலையில் பலத்த அடிபட்டு இருந்ததால் உள்காயம் ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #BENGALURU #WOMAN #DIED #UPPER BERTH #TRAIN