‘குடிசையில் திடீரென பற்றிய தீ’.. வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை..! சென்னையில் நடந்த சோக சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 30, 2019 11:54 AM

ஆவடி அருகே குடிசையில் தீப்பற்றியதால் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 year old child dies in fire accident in Chennai

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் உள்ள சுயம்பு லிங்க நகரில் ராஜேஷ்-மஞ்சு தம்பதியினர் வசித்து வருகின்றனர். ராஜேஷ் அப்பகுதியில் உள்ள தனியார் லேத்துப் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். மஞ்சு வீட்டில் குழந்தைகளை கவனித்துக்கொண்டு  இருந்துள்ளார்

இந்நிலையில் நேற்று மாலை தனது மூத்த மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக மஞ்சு சென்றுள்ளார். அப்போது அவரின் மற்றொரு மகனான 3 வயது குழந்தையை வீட்டில் விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மஞ்சு உடனே தீயை அணைக்க முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்துள்ளனர். ஆனால் குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #FIREACCIDENT #CHENNAI #CHILD #DIED