‘சிறுவனுக்கு எமனாக மாறிய ராட்டினம்’!.. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 21, 2019 11:01 AM

கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுவன் ராட்டினத்தில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8year old boy died while playing a ride in Chennai beach

சென்னை மெரினா கடற்கரையில் பத்மநாபன் என்பவர் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இந்த கடை அருகே சிறுவர்கள் விளையாடும் ராட்டினம் உள்ளது. இதை பத்மநாபனின் மகன் பிரணவ் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான். இந்நிலையில், ராட்டினத்தை இயக்குபவர் சிறுவன் பிரணவை ராட்டினத்தின் நடுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதையடுத்து, ராட்டினம் மீண்டும் இயக்கப்பட்டது. அப்போது சிறுவனின் ஆடை எதிர்பாராத விதமாக ராட்டினத்தில் சிக்கியது. இந்நிலையில், நிலைதடுமாறிய 8 வயது சிறுவன் பிரணவின் தலையில் ராட்டினத்தின் கம்பி பலமாக தாக்கியுள்ளது. இதனையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

இந்நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவனை தூக்கி சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் பிரணவ் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய சிறுவன் பிரணவின் தந்தை ‘சென்னை மெரினா கடற்கரையில் பெரும்பாலான ராட்டினம் ஓட்டுவோர் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளார். மேலும், தனது மகனை பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து, ராட்டினம் உரிமையாளரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #CHENNAI BEACH #GAMES #BOY #DIED