‘இரக்கமின்றி பிள்ளைகள் செய்த செயல்’! ‘பெற்றோர்கள் மர்மான முறையில் மரணம்’!.. பதற வைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 27, 2019 12:48 PM

பிள்ளைகளால் கைவிடப்பட்டு மயானத்தில் தங்கியிருந்த வயதான தம்பதி மர்மமான முறையில் தீயில் கருகி இறந்ததுள்ளனர்.

couple died in cremation area due to their child throws him out

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கீழ்கொடுங்கலூர் கிராமத்தை சேர்ந்த அப்பாவு - அலமேலு தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆனநிலையில் அவர்கள் அப்பா மற்றும் அம்மாவிற்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம், காலி மனைகள், வீடு என்று அனைத்து சொத்துகளையும் தங்கள் பிள்ளைகளுக்கு எழுதி வைத்துள்ளனர்.

இந்நிலையில், பிள்ளைகள் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு தங்களது பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிள்ளைகளால் விரட்டப்பட்ட 95 வயதான அப்பாவும் 90 வயதான அலமேலுவும் தங்க இடமின்றி அவ்வூர் மயானத்திலுள்ள காரிய மேடையில் அநாதைகளாக கடந்த 3 மாதங்களாக தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், வழிப்போக்கர்களிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்த இருவரும் காலை மர்மமான முறையில் அந்த மயான மேடையிலேயே எரிந்து கருகிய நிலையில் கிடந்துள்ளனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்ட போலீசார், கொலையா, விபத்தா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், 5 ஏக்கருக்கு மேல் நிலம், காலி மனைகள், சொந்த வீடு, ஏழு பிள்ளைகள் என அத்தனையும் இருந்தும் ஆதரவின்றி மயானத்தில் தங்கி, பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த தம்பதியின் கொடூரமான மர்ம மரணம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #TIRUVANNAMALAI #COUPLE #DIED