லாரியும், காரும் நேருக்குநேர் மோதி கோரவிபத்து..! தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் 4 பேர் பலியான சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 08, 2019 10:58 AM

லாரி மீது கார் நேருக்குநேர் மோதிய விபத்தில் பஞ்சாலை ஊழியர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

4 People died in Car accident near Erode

ஈரோடு மாவட்டம் ஆலத்தூர் மேடு பகுதியில் உள்ள பஞ்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்களான ஜெய்கணேஷ், கோவிந்தராஜ், தங்கப்பாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேர் வேலை முடிந்து நள்ளிரவில் காரில் சென்றுள்ளனர். அப்போது புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் சென்றுகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த லாரியின் மீது கார் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் தங்கப்பாண்டியன், சங்கர், ஜெய்கணேஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த மற்ற மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் வீரராகவன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலிஸார் தூக்கக் கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : #LORRY #CAR #ACCIDENT #ERODE #DIED