அரசு பேருந்து நடத்துநருக்கும், விளையாட்டு வீரர்களும் இடையே மோதல்..! சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 02, 2019 05:57 PM

சென்னையில் அரசு பேருந்து நடத்துநருக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Government bus conductor and passengers clash in Chennai

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து கொளத்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது பேருந்தில் பயணித்த இளைஞர்களும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நடத்துநரை இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நடத்துநரும் அவர்களின் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

நடத்துநரும், இளைஞரக்ளும் மோதிக்கொண்டதால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மோதல் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். இதில் மோதலில் ஈடுப்பட்ட இளைஞர்கள் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு பேருந்து நடத்துநருக்கும், பயணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

Tags : #GOVERNMENT #BUS #CONDUCTOR #PASSENGERS #CHENNAI #CLASH #FIGHT