'அலட்சியமாக தொங்கவிடப்பட்ட கேபிள் ஒயர்'... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 24, 2019 06:03 PM

சென்னையில் கேபிள் ஒயர், இருசக்கர வாகனத்தில் சுற்றி, தடுமாறி கீழே விழுந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

two wheeler accident in chennai ecr youth died

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியைச் சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா. 31 வயதான இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. சோழிங்கநல்லூரில் பல்பொருள் அங்காடி ஒன்றை முகமது அலி ஜின்னா, வைத்துள்ளார். நேற்றிரவு ஒரு மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு முகமது அலி ஜின்னா திரும்பியுள்ளார். ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் முகமது வந்து கொண்டிருந்தார்.

ஓரிடத்தில் சாலை தடுப்புக்கு மேலே, கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் ஒயர் ஒன்று சாலை வரை நீண்டு சுற்றிக் கொண்டிருந்தது. சாலை தடுப்பு ஓரமாக இருசக்கர வாகனத்தில் வந்த, முகமது அலி ஜின்னாவின் வாகனத்தில் கேபிள் ஒயர் சிக்கியது. இதனால் நிலை தடுமாறி முகமது அலி ஜின்னா கீழே விழுந்தார்.

அப்போது, ஜின்னா தலைகவசமும் அணியாததால் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியில் அலட்சியமாக தொங்க விடப்பட்ட கேபிள் ஒயர் தான் இந்த உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #YOUTH #DIED #CHENNAI