'வாகனச் சோதனையில் நிற்கலை'... 'லத்தியால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 17, 2019 12:58 PM

வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம்மீது லத்தியை வீசியதால், இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

one youth died in police lathi charge in madurai

மதுரை சிம்மக்கல் பகுதியில் டயர் வியாபாரம் செய்துவருகிறார் விவேகானந்தகுமார். இவரும், இவரது கடையில் வேலை செய்யும் சரவணக்குமார் என்பவரும், கடந்த சனிக்கிழமையன்று சிம்மக்கல் எம்.ஜி.ஆர் பாலத்தின் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த செல்லூர் போலீசார், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர்.

ஆனால் இருவரும் இரு சக்கர  வாகனத்தை நிறுத்தாமல் சென்றதையடுத்து,  அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின்மீது போலீசார் லத்தியை வீசியதாகத் தெரிகிறது. இதனால், விவேகானந்த குமாரும், அவர் பின்னால் அமர்ந்திருந்த இளைஞரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் காயம் ஏற்பட்டதால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த விவேகானந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த விவேகானந்தகுமாரின் உறவினர்கள் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த விவேகானந்த குமாருக்கு திருமணமாகி 2வயதில் ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #ATTACK #DIED #MADURAI