பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்து விபத்து..! 2 பேர் பலியான சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 14, 2019 10:32 PM

குஜராத் மாநிலத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 died, 29 injured as joyride breaks down at Kankaria adventure park

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கன்கரியா என்னும் இடத்தில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளாமான மக்கள் குடும்பத்தினருடன் அங்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள ராட்சச ராட்டினம் ஒன்றில் சுற்றுலா பயணிகள் பலர் அமர்ந்து சுற்றியுள்ளனர்.

அப்போது திடீரென ராட்டினத்தில் இயந்திர கோளறு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள், ராட்டினத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 26 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சென்னையில் பொழுதுப்போக்கு பூங்கா ஒன்றில் ராட்டினம் கீழே இறங்கும்போது விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Tags : #INJURED #KANKARIA #JOYRIDE #GUJARAT #DIED