சிகெரெட் பற்றவைத்த ஆட்டோ டிரைவருக்கு நடந்த விபரீதம்..! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 06, 2019 08:41 PM

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் சிகரெட் பற்றவைத்த போது தீக்குச்சி ஆடையில் விழுந்து தீ பற்றியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Auto driver died, Due to fire accident

சென்னை ஐஸ்கவுஸ் பகுதியை சேர்ந்த 67 வயதான சையத் யூசூப் என்ற ஆட்டோ ஓட்டுநர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பர் கோபி என்பவரை சந்திப்பதற்காக திருவல்லிக்கேணி சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் சிகரெட் வாங்கி சையத் யூசூப் பற்ற வைத்துள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக தீக்குச்சி ஆட்டோ ஓட்டுநரின் லுங்கியில் விழுந்துள்ளது. அப்போது சையத் யூசூப் மதுபோதையில் இருந்ததால் லுங்கியில் தீப்பற்றியை கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சையத் யூசூப்பிற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சையத் யூசூப் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கவனக்குறைவால் ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #AUTODRIVER #FIREACCIDENT #DIED #CIGARETTE