‘அவனுக்கு நீச்சல் தெரியும் அப்றம் எப்டி இது நடந்தது’.. 6 மணி நேரம் பப்ஜி விளையாடிய மகனுக்கு நேர்ந்த கொடுமை.. பெற்றோர் கதறல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 31, 2019 02:26 PM

தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி விளையாடியதால் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Student dies after playing PUBG For 6 Hours straight in Madhya Pradesh

ஃபர்கான் குரேஷி என்ற மாணவர் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமுச் டவுன் என்னும் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 -வது வகுப்பு படித்து வந்த ஃபர்கான் ஒரு பப்ஜி பிரியர் என கூறப்படுகிறது. இந்நிலையில் மதியம் சாப்பிட்டுவிட்டு பப்ஜி விளையாட ஆரம்பித்த  ஃபர்கான் தொடர்ந்து சுமார் 6 மணிநேரமாக பப்ஜி விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

இதனை அடுத்து பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்ததால் கோபமாக வீட்டில் சத்தம் போட்டு கத்தியுள்ளார். திடீரென ஃபர்கான் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஃப்ர்கானின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் ஃபர்கான் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட ஃபர்கானின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தெரிவித்த ஃபர்கானின் சகோதரி,‘சத்தம் போட்டு பேசிக்கொண்டே பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென கோபமாக கத்த ஆரம்பித்தான். உடனே காதில் மாட்டியிருந்த இயர்போனை கலட்டி ஏறிந்துவிட்டு, உன்னாலதான் நான் தோத்துட்டேன் இனிமேல் உன்கூட விளையாட மாட்டேன் என அழுதுகொண்டே சென்றான். திடீரென மயங்கி விழுந்த அவனை மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என சோகமாக கூறியுள்ளார்.

மேலும் தனது மகன் ஒரு நீச்சல் வீரன் அவனுக்கு எப்படி மாரடைப்பு வந்தது என மருத்துவர்களிடம் ஃபர்கானின் பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு, பப்ஜி விளையாட்டின் மீதிருந்த அதிக ஆர்வத்தால், அதில் தோல்வியைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லாததால் மாரடைப்பு வந்திருக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #PUBG #MADHYAPRADESH #STUDENT #DIED