‘கார் கதவு ‘லாக்’ ஆனதால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்’!.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 28, 2019 03:44 PM

ஏழு வயது சிறுவன் காருக்குள் காற்று வராததால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

7 year old boy dies inside the car due to suffocation

ஆந்திர மாநிலம் டோம்மேரு கிராமத்தில் ஏழு வயது சிறுவனான சாய்பாபா கார் கதவை திறக்கமுடியாமல் காருக்குள்ளேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நேற்று (27/05/2019) வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த காரினுள்ளே சென்று அமர்ந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென்று கார் கதவு லாக் ஆனதால் கதவை திறக்க முடியாமல் அந்த சிறுவன் தினறியுள்ளான். இதையடுத்து, காருக்குள்ளேயே மூச்சுத்திணறி அந்த சிறுவன் மயங்கியுள்ளான். இதனையடுத்து, அந்த சிறுவன் குடும்பத்தினர் சிறுவனை தேடி அலைந்துள்ளனர்.

இதையடுத்து, காருக்குள் மயங்கி கிடந்த சிறுவனை பார்த்த அவரது உறவினர்கள் சிறுவனை மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அச்சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ANDHRA PRADESH #SMALL BOY #DIED