‘1 வயது குழந்தையை மூங்கில் கட்டையால் அடித்த நபர்’.. தந்தை தோளிலேயே பலியான பரிதாபம்..! நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 01, 2019 02:24 PM

மூங்கில் கட்டையால் தாக்கப்பட்டத்தில் 1 வயது குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

One year old baby death in Trichy

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியம் கல்லுப்பட்டியில் ரெங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 1 வயது குழந்தை நித்தீஸ்வருடன் நேற்றிரவு வீட்டிற்கு அருகே உள்ள நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது செந்தில் என்பவர் அருகில் இருந்த ஆனந்த் என்பவரின் சட்டைப்பையில் இருந்து குடிப்பதற்காக பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கு இடையே சண்டை மூண்டுள்ளது. இதனை அருகில் இருந்த ரெங்கர் தடுக்க முயற்சித்துள்ளார்.

இதனால் கோபமான செந்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையால் ரெங்கரை தாக்க முயன்றுள்ளார். அப்போது ரெங்கரின் தோளில் இருந்த அவரது குழந்தையின் மீது தவறுதலாக அடி விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரெங்கர் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து செந்திலை போலிஸார் கைது செய்துள்ளனர். நண்பர்களுக்கு இடையே நடந்த சண்டையில் பரிதாபமாக குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TRICHY #BABY #DIED