‘தன்னைவிட அழகாக இருந்த தங்கை’ ‘பொறாமையால் அக்கா செய்த கொடூரம்’.. ‘கத்தியால் 189 முறை..!’ பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Oct 24, 2019 11:14 AM

தன்னைவிட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததால் உடன்பிறந்த தங்கையை அக்கா கொடூரமாக கொலை செய்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Woman who stabbed model sister 189 times is jailed

ரஷ்யா செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் எலிசவெட்டா துப்ரோவினா (22). இவரது தங்கை ஸ்டெபானியா (17). பெற்றோர் இல்லாததால் இருவரும் சிறுவதில் இருந்தே அனாதை ஆசிரமத்தில் வளர்ந்துள்ளனர். பின்னர் இருவரும் மாடலிங் துறையில் சேர்ந்தனர். எப்போதும் இணை பிரியா சகோதரிகளாகவே இருந்துள்ளனர். ஆனால் தங்கை ஸ்டெபானியா தன்னைவிட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததால் எலிசவெட்டாவுக்கு பொறாமை இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2016 -ம் ஆண்டு ஒரு நாள் தனது காதலர் அலெக்சி பதேவ் வீட்டுக்கு ஸ்டெபானியா தனது அக்காவை உடன் அழைத்து சென்றுள்ளார். அப்போது கடைக்கு பொருள் வாங்குவதற்காக அலெக்சி பதேவ் வெளியே சென்றுள்ளார். அந்த சமயம் தனியாக இருந்த தங்கை ஸ்டெபானியாவை, எலிசவெட்டா கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். தங்கையின் அழகின் மீது இருந்த பொறாமையால் 189 முறை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஸ்டெபானியா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் தங்கையின் வலது காதை அறுத்ததோடு, கண்களையும் நோண்டி எடுத்துள்ளார். இந்த கொடூர கொலைக்காக எலிசவெட்டா கைது செய்யப்பாட்டார். இந்நிலையில் எலிசவெட்டா மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

Tags : #CRIME #WOMAN #SISTERS #MODEL #KILLED