'இப்படி ஒரு மகனா?'. 'தூக்கிட்டு வாங்கப்பா அந்த செல்லத்த'..'ஒரு கார் கிஃப்ட் பண்ணனும்!'.. உருகும் ஆனந்த் மஹிந்திரா!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 24, 2019 11:08 AM

மைசூரில் வங்கிப் பணியை செய்துகொண்டிருந்த தக்‌ஷணா மூர்த்தி குமார் என்பவர் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் உள்ள புனித தலங்களுக்கு செல்ல விரும்பிய தனது தாயாருக்காக, தனது பணியைத் துறந்துள்ளார்.

I’d like to personally gift him, anand mahindras viral tweet

மேலும் இதற்கென அவர் தனது 20 வருட பழைய இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஏறக்குறைய 48 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் சுற்ற வேண்டும். அம்மாவின் யாத்திரை விருப்பத்துக்காக மகன் எடுத்துள்ள இப்படி ஒரு விசேஷ முடிவு, ட்விட்டரில் வலம் வந்ததை அடுத்து பலரையும் நெகிழ வைத்துள்ளது.

அப்படித்தான் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர்  ஆனந்த் மஹிந்திரா , தனது தாயாருக்காக இப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்திருக்கும் அந்த மகனுக்கு, தான் ஒரு மஹிந்திரா KUV 100 NXT மாடல் காரினை பரிசாக விருப்பப் படுவதாகவும்; அது அவர்களது அடுத்த பயணத்துக்கு உதவும் என்றும், ஆதலால் அவரது நண்பர்கள், இந்த அன்பளிக்க அவருக்கு அளிக்கும் தனது விருப்பத்துக்கு உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags : #ANANDMAHINDRA #MOTHER #SON #HEARTMELING