‘விடுதியில் அறை எடுத்துத் தங்கிய ஆண், பெண்’.. ‘தகாத உறவால் எடுத்த விபரீத முடிவு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 19, 2019 08:21 PM

ராமேஸ்வத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க ஆணும், பெண்ணும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pudukkottai Couple commits suicide in Rameswaram hotel room

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த முருகேசன், சத்யா எனும் இரண்டு பேர் நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். அப்போது உள்ளிருந்து பதில் எதுவுமே வராமல் இருந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் விஷம் அருந்தியும், தூக்கிட்டும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் தனித்தனியே குடும்பம், குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது.

Tags : #PUDUKKOTTAI #RAMESWARAM #COUPLE #AFFAIR #HOTEL #ROOM #SUICIDE #MARRIED #MAN #WOMAN