'FRESHERS DAY' கொண்டாட்டம்.. ‘ராம்ப் வாக்’ சென்ற மாணவி..! ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்..! சோகத்தில் மூழ்கிய கல்லூரி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 20, 2019 10:56 AM

தனியார் கல்லூரி ஒன்றில் ராம்ப் வாக் பயிற்சியில் ஈடுப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MBA student dies while practising ramp walk in Bengaluru college

பெங்களூருவின் பீன்யா என்ற பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஷாலினி என்ற மாணவி முதலாமாண்டு எம்பிஏ (MBA) பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரில் நடைபெற்ற ஃப்ரெஷர்ஸ் டே (Freahers Day) கொண்டாட்டங்களுக்கு மாணவிகள் தயாராகியுள்ளனர். அதில் ஷாலினி தனது தோழிகளுடன் ராம்ப் வாக் பயிற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

ராம்ப் வாக்கில் சென்றுகொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோழிகள் உடனே தண்ணீர் தெளித்துள்ளனர். ஆனால் ஷாலினி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து கல்லூரிக்கு வந்த போலீசார் ஷாலினியின் நண்பர்களுடன் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த காவல் துணை ஆணையர், ஃபிரெஷர்ஸ் டே கொண்டாட்டத்துக்காக பயிற்சியில் ஈடுபடும்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தோம். மேடைக்கு அருகில் நின்றிருந்தவர் தன்னுடைய சுற்று வரும்போது ராம் வாக் செய்துள்ளார். அப்போது திடீரென மயங்கி தரையில் விழுந்துள்ளார். மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்காலம் என சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார். ஃபிரெஷர்ஸ் டே கொண்டாட்டத்துக்கான பயிற்சியில் ஈடுபட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #COLLEGESTUDENT #BENGALURU #RAMPWALK #MBA #DIES #COLLEGE #WOMAN