‘ஒரே செகண்ட் தான்’.. ‘அசந்த நேரத்தில் பெண் செய்த துணிச்சல் காரியம்’.. ‘அலறியடித்து ஓடிய கொள்ளையன்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 16, 2019 07:37 PM

அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியை பெண் ஒருவர் சாமர்த்தியமாக தடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Thief sets down gun to collect money woman grabs it stops robbery

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் துப்பாக்கியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளான். இதைத்தொடர்ந்து  வேறு வழியின்றி அங்கு இருக்கும் பணத்தை வேலை செய்யும் பெண் ஒருவர் எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து கொள்ளையன் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு பணத்தை எடுத்து பைக்குள் வைத்துள்ளான். அப்போது அவன் அசந்த நேரம் பார்த்து அந்தப் பெண் நொடியில் துப்பாக்கியை எடுத்து கொள்ளையனுக்கு முன் நீட்டி மிரட்டியுள்ளார். இதனால் பயந்த திருடன் அப்படியே பணத்தை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான வீடியோவை அப்பகுதி போலீஸார் ஃபேஸ்புக்கில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

 

Tags : #US #KENTUCKY #HOTEL #ROBBERY #GUN #WOMAN #THIEF