‘விளையாடப்போன சிறுமி’... ‘2 நாள் கழித்து’... 'பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 17, 2019 03:36 PM

நெல்லை அருகே, 12 வயது சிறுமி ஒருவர், 2 நாள் கழித்து, ரத்தகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 year old girl who died in mysterious circumstances near nellai

உவரி அருகே உள்ள கூட்டப்பனை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வினிஸ்டன் - வினிதா தம்பதியினர். மீனவ குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர். இவர்களது 4-வது குழந்தையான இளவரசி (12), அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில், 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமி, கடந்த செவ்வாய்கிழமை அன்று, வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளார். வெளியில் விளையாட சென்ற அவர் சிறிதுநேரத்தில் மாயமானார்.

வினிஸ்டனின் சகோதரர் மற்றும் உறவினர் வீடு, அதேப் பகுதியில் உள்ளதால், சிறுமி இளவரசி அங்கு சென்றிருப்பார் என அவரது குடும்பத்தினர் கருதி விட்டுவிட்டனர்.  ஆனால் புதன்கிழமையன்று காலையும் வீடு திரும்பாததால், இளவரசியின் பெற்றோர், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று பார்த்தனர். அப்போது இளவரசி அங்கு வரவில்லை என தெரிந்ததும் தான், பதறியடித்து பல இடங்களில் தேடினர். பின்னர் வீட்டுக்கு அருகிலேயே, பாழடைந்த வீடு ஒன்றில் சிறுமி இளவரசி பிணமாக கிடப்பது தெரியவந்தது. அப்போது, சிறுமியின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததைக் கண்டு பெற்றோர் கதறித்துடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் மாணவி பாலியல் துண்புறுத்தலில் உயிரிழந்தாரா என விசாரித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக, கூட்டப்பனை பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களை, சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், கூட்டப்பனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DIED #KILLED #NELLAI #POLICE #INVESTIGATION #FISHERMAN #PARENTS