‘இரவோடு இரவாக வீட்டுக்குள் குழி’.. ‘அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு தப்பிய மகன்’.. கோவையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 17, 2019 05:52 PM

குடிபோதையில் தந்தையை மகனே கொலை செய்து வீட்டுக்குள் புதைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Son killed his Father for family issue in Coimbatore

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னக்கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாகாளி (60). கடந்த 2 வருடங்களுக்கு இவரது மனைவி பூவாள் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவராஜ் என்ற மகன் உள்ளார். சிவராஜுக்கு திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தந்தை மாகாளிக்கும், மகன் சிவராஜுக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு சிவராஜ் தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சிவராஜ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவராஜ் தந்தையை அடித்து கொலை செய்துள்ளார. தந்தையின் உடலை மறைப்பதற்கு இரவோடு இரவாக வீட்டுக்குள் குழி தோண்டியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மாகாளியின் வீட்டை நோக்கி வந்துள்ளனர். இதனால் சிவராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் மாகாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் தலைமறைவாக இருந்த மகன் சிவராஜையும் போலீசார் கைது செய்துள்ளனர். குடும்ப பிரச்சனையால் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #COIMBATORE #SON #KILLED #FATHER