‘எனக்கு குழந்தை பிறந்திருக்கு’ ‘காலேஜ் பேக்ல மறச்சு வச்சிருக்கேன்’.. வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்..! மிரள வைத்த கல்லூரி மாணவி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 17, 2019 03:19 PM

கேரளாவில் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான கல்லூரி மாணவி இறந்த குழந்தையின் சடலத்தை புத்தகப் பையில் மறைத்து சுற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kerala student hides body of newborn baby in bag

கேரளா மாநிலம் இடுக்கி வாத்திகுடி என்ற பகுதியைச் சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி உடன் படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞருடன் பலமுறை நெருக்கமாக இருந்ததாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும், அதனை புத்தக பையில் மறத்து சுற்றித் திருவதாகவும், அப்பெண் உறவினர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து அப்பெண்ணை கண்டுபிடித்த போலீசார், புத்தகப் பையில் குழந்தையின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவியிடம் நடந்திய விசாரணையில், கர்ப்பம் தரித்து 6 மாசமே ஆனதாகவும், இதனை பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டின் குளியலறையில் குழந்தை பெற்றதாகவும், குறைபிரசவம் என்பதால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் அப்பெண் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிறந்தது பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வதற்காக குழந்தையின் சடலத்தை ப்ளாஸ்டிக் பையில் சுற்றி புத்தகப் பையில் மறைத்து வைத்து வீட்டைவிட்டு மாணவி வெளியேறியுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தனது காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும், சில நாட்களிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மாணவியை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கல்லூரி மாணவி இறந்த குழந்தையின் சடலத்தை புத்தகப் பையில் வைத்து சுற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KERALA #CRIME #STUDENT #HIDES #NEWBORN #BAG