'அம்மாவைத் தேடி வந்த இருவரால்'... ‘தனியாக வீட்டில் இருந்த’... ‘சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 19, 2019 08:01 PM

சென்னையில், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம், 2 பேர் பாலியல் தொல்லை தந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The woman was sexually abused by two men in chennai

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண், தனது தாயாரின் சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். தாயார் கட்டிடப் பணிக்கு சென்றுவிட, வீட்டில் யாருமின்றி தனியாக இருந்துள்ளார். அப்போது, கட்டிடப் பணிகளுக்காக, அவரது அம்மாவைத் தேடி இருவர் வந்துள்ளனர். அவர்களிடம், தாயார் வேலைக்குச் சென்றுவிட்டார் என்று இளம்பெண் கூறியுள்ளார்.

இந்நிலையில், அந்த இளம்பெண் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட அந்த இருவரும், வீட்டுக்குள் நுழைந்து, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் கூச்சலிட அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இளம்பெண், தனது சித்தியிடம் நடந்தவற்றைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து, இளம்பெண்ணின் சித்தி, அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பின்னர் நடந்த விசாரணை மற்றும் இளம்பெண்ணுக்கு நடந்த பரிசோதனையில், அந்த இருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது. இதன்பிறகு அந்த இளம்பெண் தகவலின் அடிப்படையில்,  கொத்தனார் வேலை செய்துவரும் மதுரவாயலைச் சேர்ந்த புருஷோத்தம்மன் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #SEXUAL #ABUSE #YOUNG #WOMAN #CONSTRUCTION #WORKS