'பேருந்து நிலையத்தில்'... 'நள்ளிரவில் பெண் செய்த காரியத்தால்'... 'அதிர்ந்துபோன பொதுமக்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 22, 2019 11:29 AM

கிருஷ்ணகிரி அருகே பேருந்துநிலையத்தில், தூங்கியவர்களின் விலையுயர்ந்த செல்போன்களை பெண் ஒருவர் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A woman steals mobile phones from civilians sleeping in busstand

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பேருந்து நிலையம் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். காலையில் எழுந்துபார்த்தபோது, பல பேரின் செல்ஃபோன்கள் காணாததால்,  அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதி​வு செய்து, அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெண் ஒருவர் நள்ளிரவில் செல்ஃபோன்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் செல்போன்களை திருடிசென்ற பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #STEALS #WOMAN #BUS #STAND