'காதலிக்க மறுத்த இளம்பெண்'... 'பஸ் ஸ்டாப்பில் கத்தியை காட்டி'... 'இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்’... பதறவைக்கும் வீடியோ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 23, 2019 06:13 PM

ஈரோடு அருகே காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி, இளைஞர் ஒருவர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

a man threat and force to a girl for love him again

சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். பேப்பர் மில் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்த இவர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சிக்கரசம்பாளையம் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை, கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக, அந்த இளம்பெண்,  சிவக்குமாருடன் சரிவர பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் அவ்வப்போது, தன்னிடம் பேசும்படியும், காதலிக்கும்படியும் சிவக்குமார் இளம்பெண்ணை தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், வேலைக்கு செல்வதற்காக, சத்தியமங்கலம் - பண்ணாரி சாலையில் உள்ள குளத்துப்பிரிவு பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காக அந்த இளம் பெண் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவக்குமார், கத்தியை காட்டி மிரட்டி, தன்னை காதலிக்காவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என எச்சரித்துள்ளார். கத்தியால் குத்த முயற்சித்தபோது, இடதுகையில் அப்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அப்பெண்ணை கீழே தள்ளி, கொலை செய்ய சிவக்குமார் முயற்சித்தார். 

இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் பதறிப்போயினர். எவ்வளவோ கெஞ்சியும் கேட்காததால், அங்கிருந்த ஒரு வர் ஹெல்மெட்டால் சிவக்குமாரை எதிர்பார நேரத்தில் தாக்கினார். பின்னர் அனைவரும் ஓடிவந்து, சிவக்குமாரை பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சிவக்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #THREATEN #GIRL #WOMAN #YOUTH #LOVE