‘குட்டையில் சடலமாக மிதந்த இளம்பெண்’.. ‘அருகே சிதறிக் கிடந்த துணி, சாக்லேட்’.. ‘தகாத உறவால் நடந்த விபரீதம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 22, 2019 01:07 PM

நாமக்கல்லில் குட்டையிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் தகாத உறவால் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Married Woman murdered in Namakkal over love affair

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருடைய மனைவி ஷோபனா. இவர்களுக்கு தேவா (11), சச்சின் (4) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவாவின் பிறந்த நாளுக்கு துணி வாங்குவதற்காக வெளியே சென்ற ஷோபனா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

பின்னர் இரவு 9 மணிக்கு கணவருக்கு ஃபோன் செய்த அவர் ஊருக்கு வரும் கடைசி பஸ்ஸை விட்டுவிட்டதாகவும், தெரிந்த நண்பர் ஒருவருடன் காரில் வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் நள்ளிரவு வரை ஷோபனா வீடு திரும்பாததால் அவருடைய கணவர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரது உடல் புள்ளியம்பாளையம் அருகில் சாலையோரம் உள்ள ஒரு குட்டையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதற்கு அருகிலுள்ள தோட்டத்தில் ஷோபனா மகனுக்காக வாங்கிய துணி, சாக்லெட்டுகள் சிதறிக்கிடந்துள்ளன. இதனால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர். அவர் அணிந்திருந்த நகைகள் எதுவும் எடுக்கப்படாமல் இருந்ததால் நகை, பணத்திற்காக அவர் கொலை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் போலீஸார் ஷோபனாவின் செல்ஃபோனை ஆய்வு செய்து பார்த்தபோது, திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் அவரிடம் கடைசியாக பேசியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சுரேஷ் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் தகாத உறவால் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ஷோபனாவுக்கும், சுரேஷுக்கும் கடந்த 6 மாதங்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆனால் சமீபத்தில் சுரேஷ் வேறு சில பெண்களுடனும் பழகி வந்ததால் இருவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்தே சுரேஷ் ஷோபனாவைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : #NAMAKKAL #WOMAN #MURDER #MARRIED #LOVE #AFFAIR #HUSBAND #SON #BIRTHDAY #DRESS #CHOCOLATE