‘சாலையோரம் சடலமாகக் கிடைத்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘தனியாகச் சென்றபோது’.. ‘மர்ம நபர்களால் நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 23, 2019 04:25 PM

திண்டுக்கல்லில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant woman killed by gang for gold jewellery in Dindigul

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த தம்பதி தினேஷ்குமார் (25) - சுஷ்மிதா (20). நிறைமாத கர்ப்பிணியான சுஷ்மிதா இன்று காலை உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய கணவர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் கவுண்டச்சிபட்டி சாலையோரம் சுஷ்மிதா சடலமாக போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளார். பின்னர் பரிசோதித்ததில் அவருடைய வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ள நிலையில், சம்பவ இடத்திலிருந்து அவருடைய செல்ஃபோன் மற்றும் பை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுஷ்மிதா தனியாக வந்ததைப் பார்த்து மர்ம நபர்கள் அவரிடம் நகையைப் பறிக்க முயற்சித்திருக்கலாம் எனவும், அப்போது அவர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சுஷ்மிதாவின் கணவர் தினேஷ்குமாருக்கு யாருடனாவது முன்விரோதம் உள்ளதா? அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #DINDIGUL #PREGNANT #WOMAN #MURDER #GANG #GOLD #JEWELLERY #HUSBAND #BABY #DEAD