'எஞ்சினியரிங்' மாணவியை கத்தியால் குத்திவிட்டு '8வது மாடியில்' இருந்தது குதித்த 15 வயது சிறுவன்..! பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 18, 2019 02:41 PM

இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு 8 வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Teen jumps to death from 8th floor after attacking B Tech student

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 21 வயதான இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். பி.டெக் பட்டதாரியான இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெற்றோர் வெளியே சென்றிருந்துள்ளனர்.

அப்போது வீட்டுக்குள் வந்த 15 வயது சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பி.டெக் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளான். இதனால் மாணவி அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். அதற்குள் மாணவியை வெளியே தள்ளிவிட்டு அறையை உள்பக்கமாக பூட்டி சிறுவன் தப்பியுள்ளான். ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கத்தியால் குத்திய சிறுவனை வீட்டுக்குள் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன்அறைக்குள் இல்லை. அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் கீழே சிறுவன் காயங்களுடன் கிடந்துள்ளான். தப்பிப்பதற்காக 8 வது மாடியில் இருந்து சிறுவன் குதித்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுவன் எதற்காக மாணவியை கத்தியால் குத்தினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #ATTACKED #BTECH #STUDENT #STABBING #TEENAGER #NOIDA