'புதுப்பெண்ணுடன் தினமும் போனில் பேசி, இருவருக்கும் தேனிலவு நடக்காம பாத்துக்கிட்டார்!'.. 100 பெண்களை மயக்கிய போலி சமூக தொண்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 18, 2019 11:25 AM

ஈரோட்டில் சுபாஷ் மக்கள் இயக்கம் என்கிற தொண்டு நிறுவனம்  நடத்தி வரும் தங்கமணி என்பவர், தனது தொண்டு நிறுவனத்தின் பெயரால் பல பெண்களை மயக்கி, கடத்தி அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

man arrested for kidnap attempt to a newly married girl

தொராயன்மலை அடுத்த சென்னிமலையில் தனது வீட்டருகே உள்ள அண்மையில் நிச்சயமான இளம் பெண்ணிடம் தனது தொண்டு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்புகளைத் தருவதாகக் கூறியும், அதற்கான வாட்ஸ்-ஆப் குழுவில் இணைத்தும், ஒருவரை மெஸ்மெரிஸம் செய்தும் வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணுக்கு நிச்சயமான சென்னை பொன்னியம்மன் மேட்டை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் வீட்டுக்கு போன் செய்து பெண்ணை பற்றியும், பெண் வீட்டுக்கு போன் செய்து மாப்பிள்ளை பற்றியும் அவதூறான புகார்களை பரப்பியுள்ளார் தங்கமணி.

ஆனாலும் இவற்றையெல்லாம் மீறி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நடந்தது. அப்போதும் அந்த பெண்ணிடம் இரவு நீண்ட நேரம் பேசியுள்ள தங்கமணி அந்த பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தாம்பத்ய உறவு நிகழாமல் தடுத்துக்கொண்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தங்கமணியின் அழைப்புகளை ஏற்கக் கூடாது என மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் தங்கமணியின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்ட அந்த பெண், தாம்பத்ய உறவுக்கு சம்மதிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் சென்னை வந்த தங்கமணி, வெங்கடேசன் வீட்டுக்கு வந்து, தான் அந்த பெண்ணுக்கு அப்பா மாதிரி என்று சொல்லி, இருவரையும் சமாதானப்படுத்தி தேனிலவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போதும் வெங்கடேசனை காரில் இருந்து இறக்கிவிட்டு அந்த பெண்ணை மட்டும் தனியாக அழைத்துச் சென்றதால் கடுப்பான வெங்கடேசன், மனைவியை அழைத்துக்கொண்டு மீண்டும் வந்துவிட்டார். அதன் பிறகு தங்கமணி, தன் நண்பர் பாலாஜியுடன் சென்னை வந்து அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளிவரச் சொல்லி அழைத்து காரில் ஏற்றி கடத்த முயற்சித்துள்ளார்.

அதற்குள் வெங்கடேசனின் உறவினர் காரோடு தங்கமணியையும், பாலாஜியையும் வளைத்துப்பிடித்து மாதவரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தங்கமணி போலி தொண்டு நிறுவனத்தின் பேரால், இப்படி 100 பெண்களை நாசமாக்கியவர் என்பதற்கான ஆதாரங்கள் அவரது வாட்ஸ்-ஆப்பில் இருந்ததை அடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : #BIZARRE #WOMAN #KIDNAP