‘தடபுடலாக நடந்த கல்யாண ஏற்பாடு’.. ‘திடீரென மாயமான மணப்பெண்’.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 17, 2019 01:27 PM

திருமணத்துக்கு முந்தியை நாள் வீட்டைவிட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chennai girl married her lover denying marriage with her relative

சென்னை மாதவரம் சாஸ்திரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் கட்டிட தொழில் மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் மோனிகாவுக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடி செய்துள்ளார். இருவருக்கும் இன்று காலை விசாகப்பட்டிணத்தில் திருமணம் நடைபெற இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்ற மோனிகா வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் மோனிகாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே மோனிகா அப்பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்கான கார்த்திக் என்பவருடன் காவல் நிலையம் வந்துள்ளார். இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்து பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால், இருவரும் கோயிலில் திருமணம் செய்துகொண்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் மேஜர் என்பதால் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி போலீசார் அனுப்பியுள்ளனர்.

Tags : #POLICE #CHENNAI #WOMAN #MARRIED #LOVER