'கணவனை ஓவர் டேக் செய்யும் மனைவி'...'காண்டு எல்லாம் இல்ல'...'ஆனா லைட்டா பொறாமை தான்'!
முகப்பு > செய்திகள் > உலகம்By Jeno | Nov 20, 2019 09:41 AM
இயந்திர மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தின் பொருளாதார தேவையை சமாளிக்க முடியும் என்ற நிலைக்கு தற்போது பல குடும்பங்கள் வந்து விட்டன. இந்நிலையில் மனைவி அதிக சம்பளம் வாங்கினால் கணவர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
பாத் பல்கலைக்கழகம் சமீபத்தில் 6000-க்கும் மேற்பட்ட கணவன் மனைவிக்கிடையே ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் வணிக ரீதியாக யார் குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள் என்பது குறித்தும், அதனை கணவன் எவ்வாறு எடுத்து கொள்கிறார் என்பது குறித்தும் அந்த ஆய்வில் இடம் பெற்றிருந்தது. அதில் ''ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குடும்பத்தை நிர்வகிக்க 40 சதவீதம் வருமானத்தை ஈட்டினால் கணவன்மார்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதே நேரத்தில் மனைவி 40 சதவீத வருமானத்தை தாண்டினால் கணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனிடையே திருமணத்திற்கு முன்பு வரை பெண்கள் அதிகமாக சம்பாதித்திருந்தால், அது ஆண்களுக்கு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை. ஆனால் அதுவே திருமணத்திற்கு பின்பு வணிக ரீதியான குடும்ப நிர்வாகம் பெண்களிடம் செல்லும் போது அது கணவன்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அதுவே அவர்களின் உடல் நலத்தையும் பாதிப்பதாக தெரிவித்துள்ளது.
மனைவியை சார்ந்து வாழும் கணவன்களுக்கு தங்களுக்குள் மன அழுத்தம் இருந்தாலும் அதை அவர் வெளிக்காட்டுவதில்லை என அந்த ஆய்வு கூறுகிறது. இது குடும்பத்தின் சாதக நிலையை மாற்றுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அது விவாகரத்து வரை கொண்டு செல்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.