‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 14, 2019 01:58 PM

கேரளாவில் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பிய கணவர் போலீஸில் சரணடைந்துள்ளார்.

Kerala Kollam Husband Brutally Murdered Wife Over Money Issue

கேரள மாநிலம் குந்தாராவைச் சேர்ந்தவர் கிருத்தி மோகன் (25). 4 ஆண்டுகளுக்கு முன் கிருத்திக்கு முதல் திருமணம் நடந்த நிலையில், அதன்மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பின்னர் அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிய, கடந்த பிப்ரவரி மாதம் கொல்லத்தைச் சேர்ந்த வைசாக் என்பவருடன் கிருத்திக்கு இரண்டாவதாக திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு வைசாக் தொழில் தேவைக்காக கிருத்தியின் குடும்பத்தினரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் பணம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் வைசாக் ஒரு சொத்துப் பத்திரம் தொடர்பாகவும் அடிக்கடி கிருத்தியைத் தொந்தரவு செய்துவந்துள்ளார்.

சமீபத்தில் இதுதொடர்பாக கிருத்தியின் குடும்பத்தினரிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய வைசாக் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பியவர் கிருத்தியின் பெற்றோரிடம் பேசிவிட்டு தன் அறைக்குள் சென்றுள்ளார். பின் நீண்ட நேரமாகியும் கிருத்தியும், வைசாக்கும் அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவருடைய பெற்றோர் சென்று பார்த்துள்ளனர். அப்போது கிருத்தி படுக்கையில் மயங்கியது போலக் கிடந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் கிருத்திக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறிய வைசாக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என அவரைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதைப் பார்த்த கிருத்தியின் பெற்றோருக்கு சந்தேகம் அதிகமாக, அப்படியே அவரைத் தரையில் போட்டுவிட்டு வைசாக் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கிருத்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வைசாக் தானாக வந்து போலீஸாரிடம் சரணடைந்துள்ளார்.

Tags : #KERALA #KOLLAM #HUSBAND #WIFE #MURDER #PROPERTY #MONEY #PARENTS #POLICE