‘திருமணமான 4 மாதத்தில்’.. ‘பொறாமையால் கணவர் செய்த உறைய வைக்கும் காரியம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Nov 12, 2019 02:12 PM

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் தீவிர ரசிகையான மனைவியை பொறாமையால் கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

US Man Murders Wife Over Her Liking For Hrithik Roshan Kills Self

அமெரிக்காவில் வசித்துவந்த தினேஷ்வர் புத்திதட் என்பவருக்கும், டோன்னி டோஜோய் என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது. டோன்னி பாலிவுட் நடிகரான ஹிரித்திக் ரோஷனின் தீவிர ரசிகையாக இருந்தது, திருமணத்திற்குப் பிறகு தினேஷ்வருக்கு பொறாமையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஹிரித்திக் ரோஷனின் பாடல் ஓடினால் கூட டோன்னி அதைக் கேட்க தினேஷ்வர் அனுமதிக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மனைவி டோன்னியை கத்தியால் குத்திக் கொலை செய்த தினேஷ்வர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அவர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #US #HUSBAND #WIFE #HRITHIKROSHAN #FAN #BOLLYWOOD #ACTOR #MURDER #SUICIDE