‘உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு’... ‘போய்விட்டு திரும்பியபோது’... 'புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 11, 2019 04:20 PM

டிரான்ஸ்ஃபார்மரில் இருசக்கர வாகனம் மோதியதில், புது மாப்பிள்ளையான இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newly married husband died in bike accident, wife injured

சேலம் மாவட்டம், சங்ககிரி ஈ.பி. ஆயில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவர் திருச்செங்கோடு அருகே சத்து மாவு தயாரிக்கும், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி கலைச்செல்வி(27). இவர்களுக்கு திருமணமாகி, 10 நாட்கள் தான் ஆகின்றன. இந்நிலையில், தம்பதி இருவரும்,  ராசிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தனர்.

பின்னர்  திருமணத்தை முடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் தங்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கொன்னையார் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மரில் இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில், இருவரும் கீழே விழுந்தனர். இதில் தினேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  அவரை உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

அவரது மனைவிக்கு காலில் அடிப்பட்டிருந்ததால், அவர்,  ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமணத் தம்பதிகள் விபத்தில் சிக்கிய சம்பவம் கேட்டு, அவர்களது குடும்பத்தினர் கலங்கித் துடித்தனர்.

Tags : #ACCIDENT #DIED #COUPLE #HUSBAND #WIFE