‘ஆன்லைனில் காதல்’! ‘காதலியை நேரில் பார்க்க போன சாஃப்ட்வேர் இன்ஜீனியர்’.. எதிர்பாராம நடந்த பெரிய ட்விஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Nov 20, 2019 08:57 AM
ஆன்லைனில் காதலித்த பெண்ணை பார்க்க சுவட்சர்லாந்து செல்ல நினைத்த இளைஞர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரஷாந்த் வையின்டம். மென்பொறியாளாரான இவரையும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தாரி லால் என்பவரையும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் ஆவணம் இன்றி சோலிஸ்தான் பாலைவனம் வழியாக பாகிஸ்தான் செல்ல முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் எதற்காக பாகிஸ்தான் செல்ல முயன்றனர் என விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் முதல் கட்ட விசாரணையில் இணையதளம் வழியாக மத்திய பிரதேச பெண்ணை பிரஷாந்த் காதலித்துள்ளார். அதனால் ஆன்லைனில் காதலித்த பெண்ணை நேரில் பார்க்க அவர் மத்திய பிரதேசம் சென்றுள்ளார். ஆனால் அப்பெண் சுவட்சர்லாந்து சென்றுவிட்டதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த பிரஷாந்த் சுவட்சர்லாந்து செல்ல முடிவெடுத்துள்ளார்.
இதனை அடுத்து நில வழியாக சுவட்சர்லாந்து செல்வது என ஒரு வித்தியாசமான முடிவெடுத்துள்ளார். இதனால் மத்திய பிரதேசத்தில் இருந்து முதலில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று அங்கிருந்து எல்லை வழியாக பாகிஸ்தான் செல்ல முயன்றதாக தெரிகிறது. இந்நிலையில் பிராஷந்த் மற்றும் தாரி லால் ஆகிய இருவரையும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் எப்படி சந்தித்தனர்? எவ்வாறு பாகிஸ்தானுக்குள் நுழைந்தனர்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.