'சொல்லி பாத்தேன் கேக்கல சார்'...'கோபத்தில் 'பரோட்டா மாஸ்டர்' செஞ்ச கொடூரம்...அதிரவைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 16, 2019 10:27 AM

பஸ் நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த மனைவியை கணவனே கொலை செய்ய முயற்சித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் மனைவியை கொலை செய்ய முயற்சித்தது  எதற்காக என்பது குறித்து காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Man Arrested for Attempting to Cut Wife\'s Neck with Knife in Thirukkov

திருக்கோவிலூர் அருகே உள்ள பல்லரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரும் அதேபகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரும்  காதலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 10 ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் பயனாக 8 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சிவக்குமார் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வரும் நிலையில், தமிழ்ச்செல்வி ஜவுளி கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இருவரது திருமண வாழ்வில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. தமிழ்ச்செல்விக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் தகாத பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த சிவக்குமார் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் தமிழ்செல்வி கணவனிடம் பேசுவதை முழுமையாக தவிர்த்துள்ளார். சிவகுமார் எவ்வளவோ முயன்றும் தமிழ்செல்வி அவரிடம் பேசவில்லை. இதனால் அவர் விரக்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்.

இதனிடையே நேற்று முன்தினம் மாலை தமிழ்ச்செல்வி வேலை முடிந்ததும் சொந்த ஊருக்கு செல்வதற்காக திருக்கோவிலூர் பஸ் நிலையத்துக்கு வந்து, பஸ்சுக்காக காத்திருந்தார். இதனை அறிந்து மனைவியை பின்தொடர்ந்து வந்த சிவக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். இதனால் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மற்ற பயணிகள் அலறினார்கள். அப்போது அங்கிருந்த சிலர் சிவக்குமாரை மடக்கி பிடித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே கழுத்து அறுக்கப்பட்டத்தில் காயமடைந்த தமிழ்ச்செல்வி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பேருந்து நிலையத்தில் வைத்து கணவனே மனைவின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ATTACKED #THIRUKKOVILUR #NECK #WIFE #HUSBAND #KNIFE #ARRESTED